2019 நவம்பர் மாத எண்கணித பலன்கள்

தமிழ் வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கங்கள். 1 ம் எண் முதல் 9 ம் எண் வரை உள்ள எண்கள் குறிக்கும் தேதியில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாத பொது பலன்கள்குறித்து இன்று நாம் காண்போம்.
1ம் எண் : சூரியன் :
1ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
1,10,19,28 ஆகிய தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது தேதி, மாதம், வருடம் கூட்டினால் 1ம் எண் வரும் என்றாலோ சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். இவர்களுக்கு இந்த மாதம், தந்தை ஸ்தானத்தில் அல்லது குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் மூலம் நல்ல வழி காட்டுதலும் ஆலோசனை யும் கிடைக்க வாய்ப்பு உண்டு.எதிர்பாராத விருந்தினர் வருகை உண்டு. எதிர்பாராத செலவுகள் இருக்கும் என்றாலும் கவலை கொள்ளத்தேவை இல்லை. காரணம் வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் செயலாக்கம் பெறும். குறுகிய தூரப்பயணம் உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : இளம்சிகப்பு
எண்கள் : 2
கிழமை : திங்கள்கிழமை
தெய்வம் : அம்பாள்
2ம் எண் : சந்திரன் :
2ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது தேதி, மாதம், வருடம் கூட்டினால் 2ம் எண் வரும் என்றாலோ சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். இந்த மாதம் நியாயம் இல்லாத ஆசைகளால் மனம் சஞ்சலப்படும். கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். கடமையை செய்யாமல் உரிமை பற்றி பேசி எதிர் விளைவை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தார் ஆலோசனை நல்வழி தரும். புதிய வேலை மாற்றம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுகளை குறைத்தால் நன்மை உண்டு.பனி நேரம் அதிகரிக்கும். தூரப்பயணம் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : இளம் மஞ்சள்
எண்கள் : 9
கிழமை : திங்கட்கிழமை
தெய்வம் : சுப்பிரமணியர்
3ம் எண் : குரு :
3 ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
3, 12, 21, 30 தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது தேதி, மாதம் வருடம் கூட்டினால் 3ம் எண் வரும் என்றாலோ குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். இந்த மாதம் கடின உழைப்பு தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். பழைய நண்பர்கள்களை மீண்டும் சந்தித்து மகிழ்வீர்கள். இது நாள் வரை இருந்த சொத்து பிரச்னை சுமூகமாக தீரும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு நல்ல செய்தி உண்டு. வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வியாபார விரிவாக்கம் குறித்து திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : நீலம்
எண்கள் : 3
கிழமை : சனிக்கிழமை
தெய்வம் : ஆஞ்சநேயர்.
4ம் எண் : ராகு :4 ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
4, 13, 22, 31 ம் தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் 4 ம் எண் வரும் என்றாலோ ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எனலாம். இந்த மாதம் குடும்பத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டு பயணம் அல்லது தொலை தூர பயணம் உண்டு. வருமானம் அதிகரித்தாலும் செலவுகளை வகுத்துக்கொள்வீர்கள். புதிய ஆடம்பர பொருள் சேர்க்கை பெற்று மகிழ்வீர்கள்.பழைய கடன் தொல்லை நீங்கும். புதிய கடன்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். கவனம் தேவை
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பச்சை
எண்கள் : 3
கிழமை : வியாழக்கிழமை
தெய்வம் : பிள்ளையார்.
5ம் எண் புதன் :5 ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
5, 14, 23 ம் தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் 5 ம் எண் வரும் என்றாலோ புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். இந்த மாதம் சொந்த வீடு வாங்கும் சிந்தனை உதயம் ஆகும். திருமணம் செய்ய வரன் தேடுவோருக்கு நல்ல தகவல் நெருக்கமாக உள்ளவர்களிடம் இருந்து வரும். வியாபார விரிவாக்கம் செய்வீர்கள். உறவுகள் மீண்டும் இணையும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். பணம் கொடுக்கல் மற்றும் வாங்கல் கவனம் தேவை. வாக்கு கொடுப்பதில் நிதானம் தேவை.அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பச்சை.
எண்கள் : 5
கிழமை : வெள்ளிக்கிழமை
தெய்வம் : பெருமாள் கோயில்.
6 ம் எண் : சுக்கிரன் :
6 ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
6, 15, 24 ம் தேதியில் பிறந்து இருந்தாலோ, பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் 6 ம் வரும் என்றாலோ சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். இந்த மாதம் விருந்தினர் வருகையில் ஆறுதல் உண்டு. சேமிப்பு எதிர்பாராத செலவிற்கு உதவும். வாகன மாற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த பணம் தாமாக கிடைக்கும். புதிய சூழலில் வாழும் மாற்றம் நிகழும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. அலுவல் நேரம் அதிகமாகும். வேளையில் தேக்க்க நிலை இருக்கும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : ஒளிரும் வெண்மை
எண்கள் : 6
கிழமை : ஞாயிறு
தெய்வம் : ரங்கநாதர்.
7ம் எண் : கேது :
7ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கங்கள்.
7, 16, 25ம் தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் 7ம் எண் வரும் என்றாலோ கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். இந்த மாதம் அரசு உத்தியோகம் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. போட்டியில் வெற்றி உண்டு. கணவன் மனைவி உறவு பிறரால் பிரச்சினை வந்து நீங்கும். நல்ல மனிதர்களின் அறிமுகம் உங்கள் அலட்சியதால் பயன் படுத்தாமல் இழக்கும் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : சாம்பல் நிறம்
எண்கள் : 9
கிழமை : வியாழக்கிழமை
தெய்வம் : பிள்ளையார்
8, 17, 26 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் 8 ம் எண் வரும் என்றாலோ சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். இந்த மாதம் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். சிறப்பான மாதம் என்றே சொல்லலாம்.உங்கள் மதிப்பு உயரும். பண தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் மகிழ்ச்சி தரும். கணவன் மனைவி ஒற்றுமை நம்பிக்கையும் பலமும் தரும். விருந்தினராக கலந்து மகிழும் நிகழ்ச்சிகள் உண்டு. புதிய மாற்றத்தை விரும்ப மாட்டீர்கள். பழைய நினைவுகள் சிறிது வாட்டும்.அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : சந்தன நிறம்
எண்கள் : 3
கிழமை : சனிக்கிழமை
தெய்வம் : ஆஞ்சநேயர்.
9ம் எண் : செவ்வாய் :
9ம் எண்ணில் பிறந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கம்.
9, 18, 27 ம் தேதியில் பிறந்து இருந்தாலோ அல்லது பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் 9 ம் எண் வரும் என்றாலோ செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். இந்த மாதம் இட மாற்றம் வாய்ப்பு உண்டு. சகோதரரால் நன்மைகள் உண்டாகும். தேர்வில் வெற்றி உண்டு. வரவும் செலவும் அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் உறுதியாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு புகழும் வெற்றியும் உண்டு. அரசு உத்தியோகம் மற்றும் போட்டி தேர்வு எழுத நினைப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. நம்பிக்கை மேம்படும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : சிகப்பு
எண்கள் : 6
கிழமை : வெள்ளிக்கிழமை
தெய்வம் : முருகர்