Oct 2019 Monthly Free Numerology Predictions

அன்பார்ந்த வாசகர்களுக்கு நவீன் சுந்தரின் இனிய வணக்கங்கள்.1ம் எண் முதல் 9 ம் எண் வரை உள்ள தேதி குறிக்கும் எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 2019 அக்டோபர் மாத எண்கணித பொது பலன்கள் பற்றி இன்றைய கட்டுரையில் நாம் சுருக்கமாக காண்போம.
1 ம் எண் : சூரியன் :
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 1 ம் எண் வரும் எனில் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக கருதப்படுகிறது.இந்த மாதம் பொருள் வரவும் பண வரவும் அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய மனிதர்களின் அறிமுகம் தெரியாத சில தொழில்நுட்ப யுக்திகளை கற்று தரும் நல்வாய்ப்பாக அமையும்.செலவுகளை செய்து சில நஷ்டங்களை தவிர்க்க வாய்ப்பு கிடைக்கும்.குடும்ப உறவுகளில் விரிசலும் நட்புகளில் நெருக்கமும் உண்டாகும் என்பதால் சிந்தனையில் கவனம் தேவை. தவறுகளை நியாப்படுத்தாமல் நடுநிலை சிந்தனையோடு உணர்ந்தால் நன்மை உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : ஆரஞ்சு
எண் : 1
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
தெய்வம் : சிவ பெருமான் ஆலயம் வழிபாடு
2 ம் எண் சந்திரன் :2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 2 ம் எண் வரும் எனில் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக கருதப்படுகிறது.இம்மாதம் உங்களுக்கு சகோதரராலும் நண்பராலும் நன்மை உண்டு. வயதில் மூத்த பெண்களால் உதவியும் அனுகூலமும் உண்டு. புதிய முயற்சிகள் நம்பிக்கை தரும். சொத்து வகையில் லாபம் கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைப்பதில் இருந்த தடை நீங்கி நல்ல செய்தி கிடைக்கும்.முக்கியமான தவறு கடந்த காலத்தில் செய்தது இப்போது எதிரொலிக்கும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை
எண் : 3
கிழமை : செவ்வாய்
தெய்வம் : சுப்பிரமணியர்
3 ம் எண் : குரு :
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 3 ம் எண் வரும் எனில் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக கருதப்படுகிறது. இம்மாதம் பொறுப்புகளும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். ஓய்வு எடுக்க நேரம் இன்றி உழைத்தாலும் நேரம் போதாமல் கடுமையாக பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகளின் தந்திரம், உங்கள் உழைப்பின் பலனையும் நற்பெயரையும் மற்றவர்களுக்கு கிடைக்க பெறுகிறார்களோ என்று நினைக்கும் நிலை தற்காலிகமாக இருக்கும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாராட்டுதலும் அங்கீகாரமும் கிடைக்கவில்லையோ என்று நினைக்க தோன்றும். தொடர் முயற்சிகள் தேவைப்படும் மாதம் இது.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : சந்தன நிறம்
எண்கள் : 1
கிழமை : வியாழக்கிழமை
தெய்வம் : அம்பாள்
4 ம் எண் : ராகு :
4,13,22,31ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 4 ம் எண் வரும் எனில் நிழல் கிரகமான ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம் . இம்மாதம் உங்களுக்கு நிதானமும் பொறுமையும் தேவைப்படும்.சாதாரணமான விஷயங்களும் கூட தொடர் முயற்சிகளுக்கு பின்பே கிடைக்கும் நிலை சற்றே சோர்வை தரும். வெளிநாடு செல்லும் முயற்சி செய்வோருக்கு சில தடைகளை கடந்து வெற்றி உண்டு. கையிருப்பு பணம் எதிர்பாராத செலவை எதிர்கொள்ள உதவும். அதே நேரம் எதிர்பாராத பணவரவு மகிழ்வுடன் கூடிய திகைப்பை தரும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு நல்ல செய்தி உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : நீலம்
எண்கள் : 4
கிழமை : புதன்கிழமை
தெய்வம் : பைரவர் வழிபாடு.
5 ம் எண் : புதன் :
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 5 ம் எண் வரும் எனில் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக கருதப்படுகிறது. இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக அமையும். வரன் தேடுவோருக்கு நல்ல இடத்தில் விரும்பிய வரன் அமையும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழில் விரிவாக்கம் வாய்ப்பு கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் சிந்தனை கிடைக்கும் வாய்ப்புகளால் உறுதியாகும். வாகன மாற்றம் உண்டு. எதிர்பாராத செலவுகள் வந்து உங்கள் திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் செய்யும் .
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பச்சை
எண்கள் : 6
கிழமை : புதன்கிழமை
தெய்வம் : பிரம்மா & மகாவிஷ்ணு
6 ம் எண் : சுக்கிரன் :
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 6 ம் எண் வரும் எனில் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக குறிப்பிடப்படுகிறது. இம்மாதம் வேலைப்பளு குறைந்து நிறைவான பண வரவுடன் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். சிறிய அளவில்மருத்துவ செலவு வரும் என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை. சுப விரயங்களை குடும்பத்தினருடன் சுலபமாக எதிர்கொள்வீர்கள். தந்தைவழியில் சிறந்த ஆலோசனையும் வழிகாட்டுதலும் கிடைக்க பெறுவீர்கள். வாகன வகையில் எதிர்பாராத செலவு வரும் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை
எண்கள் : 5
கிழமை : வெள்ளிக்கிழமை
தெய்வம் : ரங்கநாதர்.
7 ம் எண் : கேது : 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 7 ம் எண் வரும் எனில் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக குறிப்பிடப்படுகிறது. இம்மாதம் செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. லாபம் அதிகரிக்கும். மின்சாதன பொருட்களில் சில பழுதாகுதல் மூலமாக செலவை தரும்.உங்கள் நேரத்தையும் விரயமாக்கும். வாரிசுகள் தங்கள் செயல்பாடுகளால் உங்களுக்கு மன உளைச்சலையும் சங்கடங்களையும் தருவார்கள். பிரிந்து சென்ற நெருங்கிய உறவினர் மன வருத்தம் நீங்கி மீண்டும் இணைவது நிம்மதி தரும்.சுயத்தொழில் செய்வோருக்கு வியாபாரம் நன்றாக லாபகரமாக இருக்கும். வியாபார மாற்றம் அல்லது விரிவாக்கம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள்
எண்கள் : 3
கிழமை : சனிக்கிழமை
தெய்வம் : பிள்ளையார்.
8 ம் எண் : சனி
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 8 ம் எண் வரும் எனில் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக கருதப்படுகிறது. இம்மாதம் உங்கள் கடன் பிரச்சினை தீர நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி தாமதம், இழுபறி என அனைத்தையும் தாண்டி கிடைக்கும். இட மாற்றத்துடன் கூடிய சுப பலன்கள் கிடைக்க பெற்று மகிழ்வீர்கள்.உறவினர்கள், நண்பர்கள் என குடும்பத்தினருடன் கலந்து மகிழும் மாதம் இது. வியாபார நோக்கில் வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு புகழும் வெற்றியும் உண்டு. வேலைபளு மற்றும் நேரம் இன்மை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள்
எண்கள் : 3
கிழமை : சனிக்கிழமை
தெய்வம் : ஆஞ்சநேயர்
9 ம் எண் : செவ்வாய்
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 9 ம் எண் வரும் எனில் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என பொதுவாக சொல்லலாம். சென்ற மாதம் மனஉளைச்சல் தந்த நினைவுகள் முற்றிலுமாக நீங்கி நன்மைகள் உண்டாகும் மாதம் இது. வேலை மாற்றம் முன்னேற்றம் தரும்.பெண்களுக்கு ஆண்களாலும் ஆண்களுக்கு பெண்களாலும் உதவிகள் கிடைக்கும். சகோதரர் பலம் நம்பிக்கை தரும். பொருளாதார சேமிப்பு இம்மாதத்தில் இருந்து தொடங்குவது என்ற சிந்தனை செயல் வடிவம் பெரும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பணவரவு தாராளமாக கிடைத்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் உறுதுணை உண்டு. பூர்வீக சொத்து வகையில் நல்ல தகவல் வந்து சேரும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பொன்னிறம்
எண்கள் : 6
கிழமை : வெள்ளிக்கிழமை
தெய்வம்.: சுப்பிரமணியர்.